இந்தியா

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும்... ரிசர்வ் வங்கி விளக்கம்

webteam

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பது வதந்தியே என்று ரிசர்வ் வங்கி மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ.500,ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய நோட்டுகளுக்குப் பதிலாக 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில்‌ பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது எனக் கூறி சிறு வணிகர்கள், பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுப்பதாக பல்வேறு பகுதிகளிலும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது வதந்தியே என்றும், பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் ரிசர்வ் ‌வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அது பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்பது வெறும் வதந்திதான் என தெளிவுபடுத்தியுள்ளது.