கடவுளுக்கு கடிதம் எழுதிய பெண் pt desk
இந்தியா

'எனது காதலனை சேர்த்து வையுங்கள்' - உண்டியலில் விழுந்த பெண்ணின் ‘காதல் கடிதம்’ இணையத்தில் வைரல்!

காதலுக்கு கண்கள் இல்லை மானே... என்ற வரிகள் ஒரு சில காதலர்களுக்கு கட்டாயம் பொருந்தும்... அதை நிரூபிக்கும் வகையில் பெண் ஒருவர் கடவுளுக்கே கடிதம் எழுதிய சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

PT WEB

செய்தியாளர்: மா.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம், திருப்பதி வெங்கட் ரமண சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் முதல் கோயில் ஊழியர்கள் வரை பலரும் ஆர்வமாக காணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த உண்டியலில் பணத்துடன் கடிதம் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்ட ஊழியர்கள் அந்த கடிதத்தை பிரித்து படித்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில், "திருப்பதி திம்மப்பா நான், உன் சன்னதிக்கு வந்து வணங்குகிறேன். என்னையும் எனது காதலனையும் சேர்த்து வையுங்கள். அவர் என்னை விட்டுப் போகாமல், இன்னும் அதிகமாக நேசிக்க செய்யுங்கள். நாங்கள் இருவரும் விரைவில் ஒன்று சேர வேண்டும். அவர் என்னை அலுவலகத்தில் வந்து பார்க்க வேண்டும். நான் அவரை பற்றி எப்படி உணர்கிறேனோ, அதேபோல் அவரும் என்னை உணர செய்ய வேண்டும்" என எழுதப்பட்டிருந்தது..

இந்நிலையில், தற்போது இந்தக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.