நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் அமர்வு தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் அமர்வு தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். "மழைக்கால அமர்வு தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்திலும் கோவிட்-19 சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றும் அவர் கூறினார். இந்த கூட்டத்தொடர் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.