வன்முறை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது என்று மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நமது மூவர்ணக்கொடி அவமதிக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று அவர் தெரிவித்தார். மேலும் வன்முறை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது என்றும், வேளாண்துறையை நவீனமாக்க அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.