மதவாதமும், இனவாதமும் நாட்டையே அழிக்கும் விஷம் போன்றது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின விழாவில் கூறினார்.
நம்பிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் வன்முறைகளை ஏற்க முடியாது எனக் கூறி இருக்கும் மோடி, மதவாதமும் இனவாதமும் தேசத்தையே அழிக்கும் விஷம் என தெரிவித்தார்.
முத்தலாக் முறையை எதிர்த்து போராடும் பெண்களுக்கு நாடே உறுதுணையாக நிற்கும் என்றும், இஸ்லாமிய பெண்கள் அவர்களின் உரிமைகளை பெற நடத்தி வரும் போராட்டத்திற்கு நாடே ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.