அஸாம் மாநில அமைச்சரவை, இஸ்லாமிய திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஸாம் மாநிலத்தில் இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தில் நடைபெறும் திருமணங்களை முறைப்படுத்துவதற்கும், குழந்தைத் திருமணங்களை தடுக்கும் நோக்கத்தில், அம்மாநில அமைச்சரவை இந்த புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆகவும், ஆணின் குறைந்தபட்ச திருமண வயது 21ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருமண வயது வரம்புகளை உறுதியாக கடைப்பிடிக்கவும், பெண்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தவும் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.