இந்தியா

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன ?

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன ?

jagadeesh

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் போதிய அளவு சுடு தண்ணீர் பருக வேண்டும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆயுர்வேத ‌மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் ஒத்துழைத்தால் வீட்டு வேலைகளைச் செய்யலாம் என்றும் அலுவலகப் பணிகளை படிப்படியாக தொடங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து குணம்பெற்றவர்கள் நடைப்பயிற்சி, யோகா, சுவாசப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். போதிய அளவு ஓய்வு எடுப்பதோடு நன்றாக தூங்க வேண்டும் என்றும் மது அருந்துவது, புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும் என்றும் வறட்டு இருமல், தொண்டை வறட்சி, சளி பிரச்சனைகள் இருந்தால் நீராவி பிடிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவரின் அனுமதியுடன் மருந்துகளை உட்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.