பொது நலன் கருதி நீதிமன்றங்களில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் அன்றாட செயல்பாடுகளில் ரகசியம் ஏதும் இல்லை என்றும் எனவே அங்கு கேமராக்கள் பொருத்துவதில் தவறு ஏதும் இல்லை என்றும் நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
கேமராக்கள் பொருத்தும் பணியை தொடங்க ஏற்கனவே உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாதது ஏன் என்றும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். இவ்விவகாரத்தில் தாமதம் ஏற்படுவது ஏன் ? என வரும் 23-ஆம் தேதிக்குள் விளக்கம் தரவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.