model image x page
இந்தியா

47,000 கிலோ தங்கத்தை Eng-க்கு கடத்திய இந்தியா.. ரிசர்வ் வங்கியின் பின்னணி ரகசியம் என்ன?

தங்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளையும் புதிய விதிகள் மூலம் மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.

Prakash J

1991ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின்போது, தங்கம் அடகு வைக்கப்பட்ட விவகாரம் பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தியா தனது தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே ஈடுகட்டும் நிலையில், இதன் காரணமாக அதிகளவில் அந்நியச் செலாவணி வெளியேறி வருகிறது. இது, ரூபாயின் மதிப்பில் மேல் நேரடியாக தாக்கம் செலுத்திவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அந்நியச் செலா​வணிக் கையிருப்பைப் பாது​காக்க உதவும் வகையில், ஓராண்​டுக்கு தங்கம் வாங்​கு​வதை தவிர்க்​கு​மாறு மக்களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி அறிவுறுத்​தி​யிருந்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் முதலீட்டு நோக்கத்திற்காக அதிக தங்கம் வாங்குவதைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பிற துறைகளில் முதலீட்டை ஊக்குவிக்க அரசு திட்டமிடுகிறது.

gold

இந்தச் சூழலில், இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அரியவகை உலோகங்களின் சுங்க வரியை 15% உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், தங்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளையும் புதிய விதிகள் மூலம் மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. இந்த நிலையில், 1991ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின்போது, தங்கம் அடகு வைக்கப்பட்ட விவகாரம் பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1991ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைந்த நிலைக்குச் சென்றது. அப்போது, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வெறும் 1.2 பில்லியன் டாலராகக் குறைந்தது. இது வெறும் இரண்டு வார கால இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, 47 டன் (47,000 கிலோ) தங்கத்தை இங்கிலாந்து வங்கிக்கு (Bank of England) விமானம் மூலம் அனுப்பிவைத்தது. இதைப் பிணையாக வைத்து சுமார் 400 மில்லியன் டாலர் கடன் பெறப்பட்டது. இது, இரண்டு தவணைகளாக வைக்கப்பட்டு கடன் பெறப்பட்டுள்ளது.

gold

இந்தியா தனது கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், நாட்டின் நற்பெயர் சர்வதேச அளவில் பாதிக்கப்படும் என்பதால், தங்கம் அடகு வைக்கப்பட்டது. எனினும், அடகு வைக்கப்பட்ட அனைத்துத் தங்கமும் சில மாதங்களிலேயே (நவம்பர் 1991-க்குள்), அதாவது கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டு மீட்கப்பட்டன. அதேநேரத்தில், இந்தத் தங்கம் அடகு வைக்கப்பட்ட செய்தி, அப்போது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட போதிலும், அது வெளியே கசிந்தது. இது இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான, திருப்புமுனை சம்பவமாகக் கருதப்படுகிறது. மேலும், இது இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலுக்கும் வழிவகுத்தது. அதன் பிறகு, இந்தியாவின் தங்கக் கையிருப்பில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கி 115 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சுமார் 880.5 டன் தங்கத்தைக் கொண்டுள்ளது.