இந்தியா

"கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை!ஆனால்.." - நிர்மலா சீதாராமன்

webteam

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற துவங்கியுள்ளது. இத்தொடரில் இன்று மக்களவை எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் கிரிப்டோகரன்சி குறித்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் ரிசர்வ் வங்கி நிலைப்பாடு குறித்து தகவல் அளித்தார்.

“பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி விரும்புகிறது. கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் கிரிப்டோ கரன்சியை தடை செய்தால் அதற்கு முழுமையான பலன் இராது. கிரிப்டோ கரன்சியை சர்வதேச ஒத்துழைப்புடன் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு கருதுகிறது” என்று விளக்கம் அளித்தார்.