சக்திகாந்த தாஸ் எக்ஸ் தளம்
இந்தியா

“குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை” - சக்திகாந்த தாஸ்

"குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை" என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார்.

PT WEB

ரிசர்வ் வங்கியின் 3 நாள் நிதிக்கொள்கை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக, 11ஆவது முறையாக குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். எனவே, ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் ரொக்க இருப்பு தொகை விகிதத்தை 4.5 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பணவீக்க விகிதம் அதிகரித்துள்ள நிலையிலும், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவிகிதமாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.2 சதவிகிதமாக இருக்க வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல, சி.ஆர்.ஆர். விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் தாராளமாக கடன் கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.