இந்தியா

விருப்ப ஓய்வு திட்டத்தை விரைந்து செயல்படுத்த பிஎஸ்என்எல்-க்கு உத்தரவு?

webteam

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டத்தை விரைந்து செயல்படுத்த அந்நிறுவன நிர்வாகத்துக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு தருவது தவிர தனது சொத்துகளை விற்று நிதி திரட்டும் பணியை முழுவீச்சில் மேற்கொள்ளவும் பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிர் தர 69 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது.

மேலும் மும்பை மற்றும் டெல்லியில் மட்டும் சேவை அளித்து வரும் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல்லுடன் இணைப்பதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் பிஎஸ்என்எல்லை நஷ்டப்பாதையில் இருந்து திருப்பி 2 ஆண்டுகளில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.