இந்தியா

”தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷன், பெட்ரோல்” - அவுரங்காபாத் நிர்வாகம்

EllusamyKarthik

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கவும், எரிவாயு சிலிண்டர் வழங்கவும், பெட்ரோல் மாதிரியான எரிபொருள் கொடுக்க வேண்டுமெனவும் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வரும் மக்களிடம் பணியில் இருக்கும் ஊழியர்கள், ‘கொரோனா தடுப்பூசி’ செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சரிபார்த்த பின்னரே பொருட்களை கொடுக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்த உத்தரவை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.