இந்தியா

'ரேன்சம்வேர்' வைரஸ் பின்னணியில் வடகொரியா

'ரேன்சம்வேர்' வைரஸ் பின்னணியில் வடகொரியா

Rasus

ரேன்சம்வேர் கணினி வைரஸ் தாக்குதலில் வடகொரியாவுக்கு தொடர்பு இருப்பதை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி பொறியாளர் நீல் மேத்தா கண்டுபிடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் பல்வேறு கணினி செயல்பாடுகள் முடங்கியுள்ளன. வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்படும் லாசரஸ் இணையவழி ஊடுருவல் கும்பல் இந்த வைரஸ் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு ஆதாரமாக அந்த வைரஸில் இருந்து பெறப்பட்ட சில நிரல்களை நீல் மேத்தா வெளியிட்டுள்ளார். இது லாசரஸ் இணைய ஊடுருவல் கும்பலால் பயன்படுத்தப்படுவதாகும். ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு பணம் கேட்டு வரும் மிரட்டல் வாசகங்கள் அனைத்தும் நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்படவில்லை என்றும், வேறு மொழியில் இருந்து கணினி மூலம் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.