திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கணினிகள் வைரஸ் பாதிப்பால் செயலிழந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ரேன்சம்வேர் வைரஸ் முடக்கியுள்ளது. இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் பல்வேறு நிறுவனங்கள் திணறிவருகின்றன. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கணினிகள் இந்த வைரஸ் பாதிப்பால் செயலிழந்துள்ளன. தேவஸ்தான அலுவலகத்திலுள்ள 20 கணினிகள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது ரேன்சம்வேர் என்ற பெயரில் உலக அளவில் பணம் பறிக்கும் கும்பலின் செயலா என தகவல் எதுவும் வெளியாகவில்லை.