குழந்தைகளை கடத்தி விற்றதாக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஞ்சியில், அன்னை தெரசா நிறுவிய அறக்கட்டளை ஒன்றில் பணியாற்றும் கன்னியாஸ்திரி அனிமா என்பவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சவுரவ் குமார் என்பவரிடம் குழந்தை ஒன்றை விற்பதற்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெற்றதாகக் கூறப்படுகிறது. குழந்தையை அவர் கொடுக்காத நிலையில் சவுரவ் குமார் குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து அனிமா உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜார்கண்ட்டை மாநிலத்தை சேர்ந்த 3 குழந்தைகளையும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு குழந்தையையும் கடத்தி விற்றது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் கன்னியாஸ்திரிகளிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.