இந்தியா

அன்னிய நிறுவனங்களை பதஞ்சலி விரட்டும்: ராம்தேவ் சவால்

அன்னிய நிறுவனங்களை பதஞ்சலி விரட்டும்: ராம்தேவ் சவால்

webteam

இந்தியாவில் வணிகம் செய்து வரும் பன்னாட்டு நிறுவனங்‌களை, பதஞ்சலி நிறுவனம் இன்னும் 5 ஆண்டுகளில் நாட்டை விட்டே வெளியேற்றும் என அந்நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், சகாரன்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களை நாட்டை விட்டே பதஞ்சலி விரட்டும். கிழக்கு இந்தியக் கம்பெனி வியாபாரம் மூலம் நாட்டைக் கொள்ளையடித்தது போல, இன்றுவரை பன்னாட்டு நிறுவனங்கள், நம் நாட்டை ஆக்கிரமித்துள்ளன. அவற்றை வெளியேற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் புதிதாக அறிமுகமாகும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பயிற்றுவித்து, உற்பத்தியைப் பெருக்கி, பொருள்களுக்கு ஏற்ற சரியான விலையை அவர்களுக்கு அளித்து ஊக்குவிப்போம்’ என்று அவர் தெரிவித்தார்.

பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களின் புகழ் மற்றும் வலுவான பிராண்ட் மதிப்பு வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் துறையில் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கி வருகிறது.