அயோத்தி ராமர் கோயிலுக்கு அடுத்த 15 - 20 நாள்களுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரயாக்ராஜ் நகரில் மகா கும்ப மேளா நடைபெற்று வருவதால், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
அங்கு புனித நீராடும் மக்கள், நேரடியாக அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு செல்வதால் அங்கு கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.
கூட்டத்தை சமாளிக்க முடியாததால், அயோத்தி ராமர் கோயிலுக்கு அடுத்த 15 - 20 நாள்களுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.