பெட்ரூம் ஃபேன் திடீரென விழுந்ததில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உயிர்தப்பினார்.
மும்பை, நரிமன் பாயின்ட்டில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்துவருகிறார் ராம் ஜெத்மலானி (93). மூத்த வழக்கறிஞரான இவர் தனது வீட்டின் பெட்ரூமில் கடந்த வியாழக்கிழமை தூங்கினார். காலையில் எழுந்து டெல்லிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அந்த அறையின் மேற்கூரை சீலிங் ஃபேனோடு தீடீரென கீழே விழுந்தது. அப்போது அங்கும் யாருமில்லாததால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதுபற்றி ராம் ஜெத்மலானியின் மகன் மகேஷ் கூறும்போது, ’அறையில் யாருமில்லாததால் பிரச்னையில்லை. வழக்கமாக அப்பா அங்குதான் படுத்திருப்பார். அவர் இருக்கும்போது விழுந்திருந்தால் சிக்கலாகியிருக்கும்’ என்றார். இதையடுத்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தை ஆய்வு செய்துள்ளனர்.