அமித் ஷா
அமித் ஷா PT
இந்தியா

”ராமர் இந்தியாவின் ஆன்மா... அவர் இல்லாமல் நாட்டை கற்பனைகூட செய்ய முடியாது” அமித்ஷா

Jayashree A

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா.. மோடி தலைமையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அமைதியாக நடந்து முடிந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியபோது, “புதிய இந்தியா ஜனவரி 22ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நாள் வரலாற்றில் இடம்பெறும். ஏனெனில் அன்றுதான் அயோத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ராமர் இந்தியாவின் ஆன்மா... அவர் இல்லாமல் நாட்டை கற்பனைகூட செய்ய முடியாது. 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ராமர் கோயில் பிரச்சனையை பிரதமர் மோடி தனது ஆட்சியில் தீர்த்துவைத்தார்.

முன்னதாக நடந்த பாலம்பூர் கூட்டத்திற்குப் பிறகு ராமர் கோயிலை மீண்டும் கட்டுவதாக பாஜக வாக்குறுதி அளித்தது நினைவிருக்கலாம். இந்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றி வைத்துள்ளார். பாஜகவும் பிரதமர் மோடியும் எப்போதும் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள்.

ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் மதிக்கப்படவேண்டும் . ராமர் கோயில் கட்டுவதற்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தோம்.”

”ராம்லல்லா கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி 11 நாட்கள் கடின சடங்குகளை பின்பற்றிவந்தார். இதனிடையில் அரசியல் சம்பந்தமான எந்த அறிக்கைகளையும் பிரதமர் வெளியிடவில்லை.

ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பின்மையை காட்டுகிறது. அயோத்தி விமான நிலையத்திற்கு ஸ்ரீராமரின் பெயரைச் சூட்டுவதற்குப் பல யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி துறவி வால்மீகி பெயரை வைப்பதற்கு முன்வந்தது சமூகத்தின் உள்ள அனைத்து பிரிவினரையும் அழைத்துச் செல்கிறார். ” என்று அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.