ராமர் என்றால் அன்பு, ராமர் என்றால் நீதி என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோயிலுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பின்பு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார் அதில் "மரியாதைக்குரிய புருஷோத்தமரான கடவுள் ராமர் மனித மாண்புக்கு மிகப் பெரிய உதாரணமாக திகழ்பவர். ராமரின் மனிதத் தன்மை நம் அனைவரது இதயத்திலும் எப்போதும் இருக்கும். ராமர் என்றால் அன்பு. அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது. ராமர் என்றால் சிந்தனை, ராமர் என்றால் நீதி" என தெரிவித்துள்ளார்.