இந்தியா

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாமுக்கு 3 நாள் பயணம்

JustinDurai

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூன் 8 முதல் வியட்நாமுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியட்நாமின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபான் வான் ஜியாங்கின் அழைப்பின் பேரில், ஜூன் 8  முதல் 10 வரை வியட் நாமுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். ஹனோயில் உள்ள மறைந்த அதிபர் ஹோ சி மின்னின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பாதுகாப்புத்துறை அமைச்சர் தமது  பயணத்தைத் தொடங்குவார். ராஜ்நாத் சிங், வியட்நாம் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் ஃபான் வான் ஜியாங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார், இரு அமைச்சர்களும் இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அப்போது ஆய்வு  செய்வார்கள். பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை அவர்கள் ஆராய்வார்கள்.

இரு அமைச்சர்களும் பகிரப்பட்ட ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள். பாதுகாப்புத்துறை அமைச்சர்  வியட்நாம் அதிபர் நுயென் சுவான் ஃபூக் மற்றும் பிரதமர் திரு பாம் மின் சின் ஆகியோரையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளார்.

இதையும் படிக்கலாம்: உக்ரைன் இந்திய மாணவர் கல்விக்கடன் ரத்து குறித்து ஆய்வு: மத்திய இணையமைச்சர் பதில்