இந்தியா

ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த்..!

ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த்..!

webteam

குடியரசுத் தலைவர் மாளிகையில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்பட்டது.

ஏராளமான சிறுவர், சிறுமியர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் கைகளில் உற்சாகமாக ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தினர். ராம்நாத் கோவிந்தின் மனைவிக்கும் அவர்கள் ராக்கி கயிறு கட்டினர்.

இதேபோன்று பிரதமர் மோடியும் ரக்‌ஷா பந்தன் விழாவை கொண்டாடினார். அவருக்கு குழந்தைகள் ராக்கி கயிறு அணிவித்தனர். முன்னதாக ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.