பாமக தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் அதிக நாட்கள் மாநிலங்களவைக்கு வருகை தராதது வருகைப் பதிவேடு மூலம் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் கடந்த 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு உறுப்பினர்களின் வருகைப் பதிவேடு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், மாநிலங்களவை எம்.பி.க்களின் வருகைப் பதிவுகளின் படி, திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, கிரிராஜன், அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆகியோர் அதிகபட்சமாக அனைத்து நாட்களிலும் அவைக்கு வருகை புரிந்திருப்பது தெரியவந்துள்ளது. பாமக எம்.பி. அன்புமணி ராமதாதஸ் மிக குறைந்தபட்சமாக வெறும் 6 நாட்கள் மட்டுமே அவைக்கு வருகை புரிந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர் அதிமுக கூட்டணியில் இருந்தபோது, அந்தக் கட்சி ஆதரவுடன் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.