மாநிலங்களவையில் 25 உறுப்பினர் பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
மாநிலங்களவையில் நடிகை ரேகா, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட 58 உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகின்றன. அவற்றுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மாநிலங்களை சேர்ந்த 33 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 6 மாநிலங்களில் இருந்து 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடாகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் வாக்குகள் எண்ணப்பட்டு, இன்றே முடிவுகள் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.