இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல் - திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தல் - திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

webteam

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதி‌காரியான தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத்தாக்கலின் போது திமுக சார்பில் துரைமுருகன், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலுக்கு 13ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்‌ட நிலையில், திமு‌க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுதாக்கல் செய்திருக்கின்றனர்.

இதில், திருச்சி சிவா ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். அந்தியூர் செல்வராஜ், கருணாநிதி தலைமையிலான 1996 - 2001 ஆட்சியில், கதர் துறை அமைச்சராக இருந்தவர் ஆவார். என்.ஆர்.இளங்கோ, திமுகவின் சட்ட ஆலோசகராக இருந்து ‌வருகிறார்.