இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி - 10வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

PT WEB

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் 10-ஆவது நாளாக முடங்கியது.

மாநிலங்களவை கூடிய உடன், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்து அவை நடவடிக்கைகள் தொடங்க இருந்தன. அப்போது பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவற்றை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பெகாசஸ் விவகாரத்தில் உடனே விவாதம் தேவை என முழக்கங்களை எழுப்பினர். அமளி நீடித்ததால் மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அதேபோல மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி முழக்கமிட்டனர். இதனால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.