இந்தியா

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் எந்திர துப்பாக்கியை இயக்கிய ராஜ்நாத் சிங் - வீடியோ

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் எந்திர துப்பாக்கியை இயக்கிய ராஜ்நாத் சிங் - வீடியோ

webteam

இந்தியாவின் பிரமாண்டமான விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவிற்குள் 24 மணி நேரம் தங்கியிருந்து அதன் செயல்பாடுகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டறிந்தார். 

அப்போது தாக்குதல் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சருக்கு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். கப்பலின் வெளிப்புறத்தளத்தில் கடற்படை வீரர்களுடன் ராஜ்நாத் சிங் யோகாசனம் செய்தார். விமானந்தாங்கி கப்பலில் கிடைத்த அனுபவம் குறித்து டுவிட்டரிலும் தகவல்களை ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்டுள்ளார். 

இந்திய கடற்படையின் வலிமையை நேரில் அறிய முடிந்தது பெரும் மகிழ்ச்சி தந்ததாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் எந்திர துப்பாக்கியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இயக்கினார்.