இந்தியா

சீன அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்பு

சீன அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்பு

JustinDurai

ஒப்பந்தத்தை மீறி எல்லையில் சீனா, தனது ராணுவத்தை குவிக்கக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார் ராஜ்நாத் சிங்.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய - சீனா இடையே நீடித்து வரும் பதற்றம் தொடர்பாக மாஸ்கோவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வே ஃபெங் க, இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கடந்த மே மாதம் லடாக் எல்லையில் இந்திய படையினருக்கும் சீன படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பிறகு, இரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்கள், இப்போதுதான் முதன்முதலாக நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

இந்த சந்திப்பின்போது, ஒப்பந்தத்தை மீறி எல்லையில் சீனா தனது ராணுவத்தை குவிக்கக்கூடாது என்றும் இந்தியாவின் இறையாண்மை உறுதியுடன் பாதுகாக்கப்படும் எனவும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறினார். சீன பாதுாப்புத்துறையின் வேண்டுகோளின்படியே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.