இந்தியா

“பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்துங்கள்” - ராஜ்நாத் சிங்

“பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்துங்கள்” - ராஜ்நாத் சிங்

webteam

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்தும் கொள்கையை சர்வதேச நாடுகள் வகுக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையே ராணுவ கூட்டுப் பயிற்சி தாஸ்கண்டில் இன்று முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ கூட்டுறவு என்பது அத்தியாவசியமானது என்றார்.

மேலும், பயங்கரவாதம் உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது என்றும், எனவே பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு ராஜ்நாத் சிங் பேசினார்.