சீனாவுடனான எல்லை பிரச்னை இன்னும் தீரவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர் "எல்லையில் நமது வீரர்கள் கடினமான சோதனைகளை எதிர்கொண்டு நாட்டை காத்து வருகின்றனர். சீனாவுடனான எல்லை பிரச்சனை இன்னும் தீரவில்லை. லடாக் எல்லை பிரச்னை காரணமாக இந்திய சீன உறவில் தாக்கம் ஏற்படும். லடாக் எல்லையில் சீனா அத்துமீறி உள்ளே ஈடுபடக்கூடாது. இந்தியா அமைதியை விரும்புகிறது. கல்வானில் சீனா வன்முறையில் ஈடுபட்ட போது நமது துணிச்சலான வீரர்கள் சீன தரப்பில் உயிரிழப்பை ஏற்படுத்தினர். நாட்டு மக்கள் ராணுவத்திற்கு பக்கபலமாக நிற்பதை பிரதமரின் லடாக் பயணம் தெரிவித்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு குளிர்காலத்திற்கு தேவையான சிறப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.