இந்தியா

ஒரு தொகுதி தோல்வி ஒட்டுமொத்த மக்களின் கருத்தாகாது: ராஜ்நாத் சிங்

ஒரு தொகுதி தோல்வி ஒட்டுமொத்த மக்களின் கருத்தாகாது: ராஜ்நாத் சிங்

Rasus

ஒரு மக்களவை தொகுதி முடிவு ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மக்களவை எம்.பி. வினோத் கன்னா கடந்த ஏப்ரலில் காலமானார். அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் சார்பில் சுனில் ஜாஹர், பாஜக சார்பில் ஸ்வரண் சலாரியா, ஆம் ஆத்மி சார்பில் சுரேஷ் கஜுரியா போட்டியிட்டனர். கடந்த 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜக வேட்பாளர் ஸ்வரண் சலாரியாவை ஒரு லட்சத்து 93,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடித்தார். இத்தொகுதி ஏற்கனவே பாரதிய ஜனதாவிடமிருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி அதனை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் ஒரு மக்களவை தொகுதி முடிவு ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். குர்தாஸ்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியடைந்த நிலையில் ராஜ்நாத் சிங்கின் இக்கருத்து வெளியாகியுள்ளது.