பெங்களூருவில் நடைபெற்று வரும் சர்வதேச விமான கண்காட்சியில் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி போர் விமானத்தை இயக்கினார்.
விமான ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ள ராஜீவ் பிரதாப் ரூடி ரஃபாலே பைட்டர் ரக விமானத்தை இயக்கினார். எலஹங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், ஜெர்மனி, பெல்ஜியம் உட்பட 51 நாடுகளின் அதிநவீன போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன.