இந்தியா

ராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு: மத்திய அரசு அறிக்கை!

ராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு: மத்திய அரசு அறிக்கை!

webteam

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கான குண்டு செய்யப்பட்டதன் பின்னணியில் இருந்த சதி குறித்த விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது.

1991ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன் தற்போது பரோலில் விடுவிடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு 26 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜீவ்காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட குண்டு உருவான விதம் குறித்து உரிய விசாரணை நடைபெறவில்லை என பேரறிவாளன் தரப்பில் கடந்த மாதம் மனு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இதை விரிவாக விசாரித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா அமர்விடம் மூடி முத்திரையிடப்பட்ட அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு குறித்த விசாரணையை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில் இந்த அறிக்கையை மனுதாரரான பேரறிவாளன் தரப்புக்கு தர இயலாது என அரசு வழக்கறிஞர் மணீந்தர் சிங் தெரிவித்தார்.