இந்தியா

பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்?: உச்சநீதிமன்றம்

Rasus

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கில் சிபிஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததால் தனக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும், இதனால் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? என கேள்வி எழுப்பினர். பேரறிவாளனின் வாக்குமூலத்தை, அவரது வழக்கறிஞரிடம் படித்துக்காட்டிய நீதிபதிகள், பேரறிவாளனின் வாக்குமூலத்தை பார்த்தால் அவர் விடுதலைப்புலிகளின் அனுதாபி என தெரிகிறது என குறிப்பிட்டார். மின்னணு டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு 9 வாட் பேட்டரி கொண்டு வெடிகுண்டு தயாரிக்கப்படும் என்பது கூட தெரியாதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.