இந்தியா

குடியரசுத்தலைவர் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ராஜேஷ் லக்கானி தகவல்

webteam


குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளர் அறை அருகே உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளதாகக் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்குசீட்டு வழங்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிற வாக்குசீட்டு வழங்கப்படும் எனவும்‌ லக்கானி தெரிவித்தார். தேர்தலுக்கான வாக்குபெட்டி மற்றும் தேர்தல் உபகரணங்கள் வரும் ஜூலை 13ம் தேதி சென்னைக்கு கொண்டுவரப்படும் எனவும் லக்கானி தெரிவித்தார். தேர்தல் ஆணையம் கொடுத்த‌ள்ள பேனாவை மட்டுமே உறுப்பினர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் உறுப்பினர்களுடைய பேனாவில் வாக்குச்சீட்டை பூர்த்தி செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தேர்தல் பார்வையாளராக தாமும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக சட்டப்பேரவை செயலாளர் பூபதியும் பணியாற்ற உள்ளதாகவும், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குபெட்டி சீல் செய்யப்பட்டு அன்று இரவோ அல்லது அடுத்த நாள் காலையோ பாதுக்காப்பாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் லக்கானி தெரிவித்தார்.