இந்தியா

குடும்ப கட்டுப்பாடு செய்துக்கொண்டால் புடவைகளும், ஸ்மார்ட்ஃபோன்களும் பரிசு

குடும்ப கட்டுப்பாடு செய்துக்கொண்டால் புடவைகளும், ஸ்மார்ட்ஃபோன்களும் பரிசு

webteam

குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்பவர்களுக்கு புடவைகள், ஸ்மார்ட்ஃபோன்கள் போன்றவற்றை பரிசாக அளிக்கும் திட்டத்தினை ராஜஸ்தான் அரசின், ஜலாவார் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கு, 4ஜி ஸ்மார்ட்ஃபோன் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட 200 ஆண்களுக்கு ஸ்மார்ட்ஃபோன்களும், 250 பெண்களுக்கு புடவையும் ராண்டம் முறையில் ராஜஸ்தான் அரசால் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் ஆண்களுக்கு 2000 ரூபாயும், பெண்களுக்கு 1400 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த வருடத்தில், ராஜஸ்தானின் ஜலாவார் மாவட்டத்தில் மட்டும், 8703-ஐ இலக்காக வைத்து, 8795 குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் (270 ஆண்கள், 8525 பெண்கள்) மேற்கொள்ளப்பட்டதாகவும், இத்தகைய எண்ணிக்கை இதுவே முதன்முறை எனவும் ஜலாவார் மாவட்டத்தின் முதன்மை சுகாதார அதிகாரி சஜித் கான் தெரிவித்துள்ளார்.