பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தானில் அரசு ஊழியர் ஒருவரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
ஷாகுர் கான் என்ற இந்த நபர் ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரின் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாகுர் கானின் தொலைபேசி தரவுகள் அடிப்படையிலும் அவர் பாகிஸ்தானுக்கு சில முறை சென்று வந்ததன் அடிப்படையிலும் இந்த கைதை செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக யூ டியூபர் கவிதா மல்ஹோத்ரா, சிஆர்பிஎஃப் வீரர் மோட்டி ராம் ஜாட்டு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில் இதுவரை பத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது