இந்தியா

கருப்பு பூஞ்சை தொற்றை, பெருந்தொற்றாக அறிவித்த ராஜஸ்தான் அரசு

நிவேதா ஜெகராஜா

 கொரோனாவுக்கான சிகிச்சைகளில் அதிகப்படியாக ஸ்ட்ரீயாடு மருந்துகள் கொடுப்பதால் ஏற்படும் கருப்பு பூஞ்சை தொற்று (எ) முகோர்மைகோஸிஸ் பாதிப்பை, பெருந்தொற்று / பெருவாரியாக பரவும் தொற்று நோய் என்ற பட்டியலின் கீழ் அறிவித்துள்ளது ராஜஸ்தான் மாநில அரசு.

ஜெய்பூர் பகுதியிலுள்ள மருத்துவமனையொன்றில், கருப்பு பூஞ்சை தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கும் 100 நோயாளிகளுக்கு தனித்தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து, இது மிகவும் கவனிக்கத்தக்க நோய் பாதிப்பு என்றும், இது பெருந்தொற்று நோய் என்றும் அம்மாநில முதன்மை சுகாதாரத்துறை செயலர் அகில் அரோரா அறிவித்திருக்கிறார்.

இந்தத் தொற்று வேகமாக பரவுவதை தொடர்ந்து, இதை தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒருங்கிணைந்த முறையில் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த தொற்று பற்றி பேசியிருக்கும் நிபுணர் குழுவினர், இது சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் எளிதில் ஏற்படுகிறது என தகவல் தெரிவித்துள்ளனர்.