கொள்ளையர்கள் சுட்டதில் படுகாயமடைந்த ஏடிஎம் காவலாளி ஒருவர், துணிச்சலுடன் போராடி பல லட்சம் ரூபாய் பணத்தை காப்பாற்றியுள்ளார்.
டெல்லியின் மஜ்ரா தபாஸ் என்ற இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு பணியில் இருந்த காவலாளியை ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ஏடிஎம் மையத்திற்குள் நுழைய முயன்ற கொள்ளையர்களை, உடலில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையிலும் காவலாளி தடுத்தார்.
அவர் தொடர்ந்து தடுத்ததால் பணத்தை கொள்ளையடிக்க முடியாமல் கொள்ளையர்கள் திரும்பிச் சென்றனர். படுகாயமடைந்த காவலாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை முயற்சியை வீடுகளுக்குள் இருந்தபடி வழக்கம்போல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள், கொள்ளையர்கள் சென்ற பின்னரே வெளியே வந்தனர்.