தீபெந்திரெ நேதமென் கூகுள்
இந்தியா

ராய்ப்பூர் | தந்தையை தாக்கிய கரடி.. பாய்ந்து சென்று காப்பாற்றிய 10 வயது சிறுவன்!

ராய்ப்பூர் பஸ்தார் பகுதியில் இருக்கும் அபுஜ்மார் கிராமத்தில் பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் ஹந்தவாடா நீர்வீழ்ச்சி ஒட்டிய நாராயண்பூர் காடுகளில் சுள்ளிகள் மற்றும் மூங்கில்கள் சேகரிப்பது வழக்கம்.

Jayashree A

ராய்ப்பூர் நாராயண்பூர் காடுகளில் சோம்பல் கரடி தாக்குதலில் இருந்து தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் துணிச்சல்... என்ன நடந்தது பார்க்கலாம்.

ராய்ப்பூர் பஸ்தார் பகுதியில் இருக்கும் அபுஜ்மார் கிராமத்தில் பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் ஹந்தவாடா நீர்வீழ்ச்சி ஒட்டிய நாராயண்பூர் காடுகளில் சுள்ளிகள் மற்றும் மூங்கில்கள், மூலிகைகள் சேகரிப்பது வழக்கம்.

சம்பவதினத்தன்று, அபுஜ்மார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நாராயண்பூர் காடுகளில் மூங்கில் சேகரிக்க நினைத்து, தனது மகனான தீபெந்திரெ நேதமென்(10) உடன் சென்றுள்ளார்.

தந்தையும் மகனும் 10 அடி தூரங்களில் காடுகளில் மூங்கில் சேகரித்துக்கொண்டிருந்த பொழுது, எதிர்பாராதவிதமாக சோம்பல் கரடி ஒன்று சிறுவனின் தந்தையை பின்புறமாக வந்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை சமாளிக்கமுடியாமல் சிறுவனின் தந்தை கரடியுடன் போராடியுள்ளார்.

கரடியின் விரல்களில் இருந்த கூறிய நகமானது தந்தையின் முகத்தினை கிழிக்க ஆரம்பித்தைக் கண்ட தீபெந்திரெ நேதமென் தன்னுரையும் பொருட்படுத்தாமல், தந்தையை காப்பாற்ற நினைத்து, தனது கையிலிருந்த மூங்கிலால் கரடியை தாக்கியுள்ளார். இதில் சிறுவனுக்கும் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சிறுவனின் தாக்குதலில் கரடியின் முதுகில் காயம் ஏற்படவே கரடியானது அவரது தந்தையை விட்டுவிட்டு சென்றுள்ளது.

இருப்பினும், கரடி திரும்பி வந்து அவர்கள் மீது தாக்குதலை நடத்தலாம் என்ற நிலை இருந்தாலும், மிகவும் துணிச்சலுடன், காயமடைந்த தனது தந்தையை சில கிலோமீட்டர் நடத்தி கூட்டி வந்து பிறகு கிராம மக்களை உதவிக்கு அழைத்துள்ளார் சிறுவன் தீபெந்திரெ நேதமென். பிறகு, கிராமமக்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து, இருவரையும் தண்டேவாடா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மிகவும் துணிச்சலுடன், தன்னம்பிக்கையுடன் தந்தையின் உயிரை கரடியிடமிருந்து காப்பாற்றிய சிறுவனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.