இந்தியா

வானில் தோன்றிய அரிய நிகழ்வு - சூரியனைச் சுற்றி தோன்றிய 'Sunbow'

Sinekadhara

டேராடூனில் தோன்றிய வானவில் போன்ற அரிய சூரிய ஒளிவட்டம் பார்ப்போரை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

சூரிய ஒளிவட்டம் அவ்வப்போது வானில் தோன்றுவது ஒரு நிகழ்வு. சூரியனைச் சுற்றி வட்டமிட்டது போன்று ஒரு ஒளிவட்டம் தோன்றும். இதேபோல் நிலாவைச் சுற்றியும் இந்த வட்டத்தை எப்போதாவது நம்மால் பார்க்கமுடியும். ஆனால் அந்த ஒளிவட்டமே வானவில்லை போன்று தோன்றும் நிகழ்வு என்பது மிகவும் அரிதானது. ஞாயிற்றுக்கிழமை மதியம் டேராடூனில் வசிக்கும் மக்கள் சூரிய ஒளிவட்டத்தின் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அதில் முழுவட்ட வானவில்லை போன்று சூரியனைச் சுற்றி தோன்றிய ஒளிவட்டம் பார்ப்போரை கவர்ந்திருக்கிறது.

இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. 22 டிகிரி ஒளிவட்டம் சூரியனை அல்லது சந்தினைச் சுற்றி தோராயமாக 22 டிகிரி ஆரத்தில் வானவில் போன்று தோன்றுகிறது. வளிமண்டலத்திலுள்ள லட்சக்கணக்கான அறுகோண பனி படிகங்களில் சூரிய ஒளிவிலகல் காரணமாக இது நிகழ்கிறது என்று வானிலை மைய இயக்குனர் பிக்ரம் சிங் கூறியுள்ளார்.