ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக 17 ஆண்டுகளுக்குப்பின் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள பேத்தமங்கலம் அணை திறக்கப்பட்டுள்ளதாலும், ஆந்திராவில் கனமழை பெய்துவருவதாலும், வேலூர் மாவட்டத்திற்கு வரும் பாலாற்றின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தமிழக ஆந்திர எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் பாலாறு, வேலூர் மாவட்டத்தின் விவசாய பணிகளுக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது.