வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர், இது, ஒடிஷா-மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த தாழ்வு மண்டலம், பாலசோருக்கு 50 கிமீ தென் கிழக்கில், மேற்கு வங்கம் டிக்காவுக்கு 60 சிமீ தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது.பின்னர், வடக்கு ஒடிஷா-வடக்கு சத்தீஸ்கர் வழியாக நகரக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஒடிஷா கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கோவை நீலகிரியில் இடியுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.