இந்தியா

தேஜஸ் ரயில்களில் ஏசி கோச்களை அறிமுகம் செய்யும் இந்தியன் ரயில்வே

Veeramani

தேஜஸ் ரயில்களில் 500 பெட்டிகளை, குளிர்சாதன படுக்கைவசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்தது.

நீண்ட தூரம் பயணம் செய்யும் பிரீமியம் தேஜஸ் ரயில்களில் 500 பெட்டிகளை, குளிர்சாதன படுக்கைவசதி கொண்ட பெட்டிகளாக அடுத்த ஆண்டில் "படிப்படியாக மாற்ற” திட்டமிட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இத்தகைய வசதி கொண்ட முதல் ரயிலாக பிப்ரவரி 15 முதல் அகர்தலா-ஆனந்த் விஹார் டெர்மினல் சிறப்பு ராஜதானி எக்ஸ்பிரஸ் மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"அதிநவீன ஸ்மார்ட் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்லீப்பர் வகை தேஜாஸ் ரயிலின் கோச்கள், சிறந்த பயண அனுபவத்தை வழங்கும்" என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.