இந்தியா

`2021-ஐ விட 2022-ல் 92% அதிக வருவாய்!’ மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் #VideoStory

webteam

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதுவரையிலான இந்த ஆண்டில் ரயில்வே துறையில் 92 விழுக்காடு வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டில் ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.17,394 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் வரை 33 ஆயிரத்து 476 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை 42 கோடியே 89 லட்சம் எனவும், இதன் மூலம் கிடைத்த வருவாய் 26 ஆயிரத்து 961 கோடி எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் முன்பதிவு செய்யப்படாத பயணிகளின் மூலம் கிடைத்த வருவாய் 6 ஆயிரத்து 515 கோடி என்றும் கடந்த 2021ம் ஆண்டு கிடைத்த வருவாய் ஆயிரத்து 86 கோடி எனவும் மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.