இந்தியா

தண்டவாளத்திலிருந்து கீழிறங்கியது விரைவு ரயில்

தண்டவாளத்திலிருந்து கீழிறங்கியது விரைவு ரயில்

webteam

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தண்டவாளத்திலிருந்து விரைவு ரயில் கீழே இறங்கியதால் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை. 

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் குப்பம் என்ற ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை விட்டு கீழிறங்கியது. அதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாத நிலையில் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.