மகாராஷ்டிரா மாநிலம் நய்கவுன் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து கீழே விழுந்த சிறுவனை ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நய்கவுன் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் பயணிப்பதற்காக தனது தாயுடன் 7 வயது சிறுவன் வந்திருந்தான். தாயை பின்தொடர்ந்து சிறுவன் சென்றுக்கொண்டிருந்தான். மின்சார ரயிலில் தாய் ஏறிய நிலையில் சிறுவன் ஏறுவதற்கு முன்பே மின்சார ரயில் புறப்பட்டது. இதனால் நிலை தடுமாறிய சிறுவன் நடைமேடையில் இருந்து கீழே விழ இருந்த நிலையில், அங்கு பணியில் இருந்த ரயில்வே காவலர் சுனில் நாபா துரிதமாக செயல்பட்டு சிறுவனைக் காப்பாற்றினார். இந்த நிகழ்வு ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.