இந்தியா

பழைய இருப்புப் பாதைகள் உடனே மாற்ற ரயில்வே அமைச்சர் உத்தரவு

webteam

நாடு முழுவதும் உள்ள பழைய ரயில் இருப்புப் பாதைகளை உடனே மாற்றுமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு அந்தத் துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ரயில்கள் தடம்புரண்ட சம்பவங்களை அடுத்து, ரயில்வே உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் இருக்கும் ஆளில்லா லெவல் கிராசிங்குகள் ஓராண்டுக்குள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கிடப்பில் உள்ள புதிய திட்டங்களுக்கான இருப்புப் பாதைகளை விரைந்து அமைக்குமாறும், அதற்கு ஏதுவாக புதிய ரயில்களைக் கொள்முதல் செய்யும்படியும் அமைச்சர் அறிவுறுத்தினார். வழக்கமான வடிவங்களில் ரயில்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, புதிய வடிவங்களிலான ரயில்களைத்தான் இனி உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். ரயில் பயணிகளின் பாதுகாப்பே தலையான பணி என்று கூறியுள்ள பியூஷ் கோயல், அதில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.