Ashwini Vaishnaw Twitter
இந்தியா

“ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு” - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்! #Video

ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நிறைவடைந்து வரும் நிலையில், புதன்கிழமை முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

PT WEB

ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 2-வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுவிட்டது. அதன்படி சிக்னல் தொடர்பான மின்னணு அமைப்பில் ஏற்பட்ட மாற்றம்தான் விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. தொடர்ந்து தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நிறைவடைந்து வருகிறது. புதன்கிழமை முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும்” என தெரிவித்தார்.

இதுதொடர்பாக கட்டுரையின் மேல் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.